Monday 31 May 2010

மறு வாழ்வு எதற்கு ??

எப்பவும் போல காலை 9 மணிக்கு வேலைக்கு (10/12/2009) போய் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் மாரடைப்பு , 10am ஆம்புலன்ஸ் வரவழைக்க பட்டு Wexham Park hospital சரியான நேரத்தில் போனதினால் , இன்று மறு படியும் இவ்வுலகில் மறு பிறப்பு எடுத்து உள்ளேன் , மூன்று வாரம் Wexham Park கில் இருந்தபோது Nurse களின் வேலை பார்த்து வியந்தேன் , சகிக்க முடியாத ஒரு profession எல்லா வற்றையும் சகித்து கொண்டு nurse மார்கள் செய்யும் சர்வீஸ் வார்த்தையால் விவரிக்க முடியாது , 29/12/2009 transferred from Wexham park to Hairfield for open Heart surgery , 30/12/2009 Heart Operation எத்தனை உறவினர் இருந்தும் அனாதையாக , வந்தது வரட்டும் என்று ஆண்டவன் விட்ட வழி என்று இருந்த நமக்கு நல்ல படி operation நடந்தது ஒரு வழியாக !! 03/01/2010 மகளும் , குழந்தைகளும் வந்தது பார்த்து ஒரு இனம் தெரிய சந்தோசம் , மூணு மாதம் அவர்களுடன் இருந்தது ஒரு மறு வாழ்வு , மனைவி இறந்த போது இருந்த அதே பிரிவு மகள் ஊருக்கு கிளம்பியதும் , என்னசெய்ய அவர்கள் குடும்பம் பார்க்க அவர்கள் போகத்தானே வேண்ட்டும் !!! காசு இருக்கோ இல்லையோ ஒரு மனிதனுக்கு நோய் , தணிமை, இவ்விரண்டும் வரகூடாது , இதை சொல்லி வார்த்தையால் கூறமுடியாத ஒன்று...எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரகூடாது .
கடவிளிடம் ஒரு வேண்டு கோல் உலகில் எல்லோரையும் நலமாக வை , இல்லையேல் எல்லோரையும் உன் வசம் அழைத்து கொள் !!!