Friday 13 August 2010

தேடல்

நான் சின்ன வயசா இருக்கும் போது என் தகப்பனார் அரசாங்க உத்தியோகத்தில் எப்பவும் வெளியூர் போய் வார கடைசி நாட்களில் வீடு வருவார் , அவர் வருகைகா நான் பஸ் ஸ்டான்ட் போய் கடைசி பஸ் போகும் வரை காத்திருப்பேன் , பெரும்பாலான நாட்களில் நான் காத்திருந்த நாளுக்கு அடுத்த நாளே அவர் வருவர் , அதுவும் நாங்கள் உறங்கியபின் , இப்படியாக என் பிள்ளை பருவம் !!! தந்தையின் அன்புக்காக ஏங்கிய பிள்ளை பருவம் என்னுடையது , அதுவும் 19 வயது வரை இப்படி தேடி தேடி வீட்டு உறவுக்களுடன் வாழ்ந்த நான், சம்பாதிக்க 19 வயதில் வீட்டை விட்டு வெளியேறியவன் இன்னும் வீட்டை அடைந்த பாடில்லை !!! எதை தேடி வீட்டை விட்டு வெளியே வந்தேனோ அந்த தேடல் இன்னும் முடிந்த பாடில்லை !! தேடல் தொடருகிறது இன்று வரை , என்று முடியுமோ இந்த தேடல் !!!!