Monday 14 April 2014

விக்னேஸ்வரன் 
நம்ப வீட்டு குழந்தைகள் எவ்வளவு அழகா  வண்டி ஓட்டறான் என்று பெருமை பேசும் தாய் /தந்தை இதை படிக்கவும் ,  படத்தில் உள்ள சிறுவன் 15 வயது ஒன்பதாவது படித்து கொண்டு வருகிற கல்வி ஆண்டில் (2014-2015) 10-வது போக வேண்டியவன் , மிகவும் சுறு சுறுபாய் ஓடி ஆடி விளையாடும் சிறு வயது , அவனுக்கு புது புது வண்டிகளை ஓட்ட மிகுந்த ஆர்வம் , பையனின் தயார் எப்பவும் சத்தம் போட்டு கூப்பிட்டு வீட்டில் இருக்க  செய்வார் , அவருக்கு தெரியாமல் நண்பர் களுடன் சேர்ந்து வெளியில் போய் விடுவான் , வீட்டின் இரண்டாவது (கடை குட்டி என்பதால் )பையன் என்பதால் அப்பா அத்தனை கண்டிப்பு இல்லை . 27/03/2014 அன்று மதியம் வீட்டில்  தூங்கி கொண்டிருந்தவனை நண்பர்கள் கூப்பிட்டு மூன்று பேர் ஒரே வண்டியில் செல்லும் போது, போலீஸ் நிறுத்தவே போலிசுக்கு பயந்து வண்டியை எதிர் திசைக்கு திருப்பிய சம்யம் எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதி நடுவில் அமர்ந்த விக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான் , வண்டியை ஒட்டி சென்ற பையன் மறுநாள் காலை மரணமடைந்தான் - சிறு பிள்ளைகளுக்கு வண்டியை கொடுக்கும் அப்பா/அம்மா விற்கு இது ஒரு பாடம்!!!!. வளர வேண்டிய வயதில் இரு உயிர்கள் மரண அடைய யார் காரணம் ? 

1 comment:

Unknown said...

கண்டிப்பாக பெற்றோர்கள்தான் காரணம்